தொடர் அவுஸ்திரேலியா வசம்

தொடர் அவுஸ்திரேலியா வசம்

தொடர் அவுஸ்திரேலியா வசம்

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2014 | 8:16 pm

இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

சிட்னியில் இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா தொடரை தன்வசப்படுத்தியது.

இந்தப் போட்டியில் 196 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்மூலம் மீண்டுமொரு மோசமான போட்டித் தோல்வியை இங்கிலாந்து சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜோர்ஜ் பெய்லி தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்