முர்ஷி மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பம்

முர்ஷி மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பம்

முர்ஷி மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 6:26 pm

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சி வழக்கு விசாரணைகளுக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முஹமட் முர்சி மீதான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

நீதிமன்ற வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன்  பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்  பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்