மாகாண சபை தேர்தல்; 20 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

மாகாண சபை தேர்தல்; 20 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

மாகாண சபை தேர்தல்; 20 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 10:31 am

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு, இதுவரை 20 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

பத்து சுயேட்சைக் குழுக்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

இதேவேளை, பெப்ரவரி 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைவதுடன், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் பூர்த்தியடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்குள் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 15 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்திற்காக 8 சுயேட்சைக் குழுக்களும், கம்பஹா மாவட்டத்திற்காக 3 சுயேட்சைக் குழுக்களும், களுத்துறை மாவட்டத்திற்காக 4 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

தென் மாகாணத்தில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்காக 5 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் 2 சுயேட்சைக் குழுக்களும், மாத்தறை மாவட்டத்தில் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்தவொரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தவில்லை என்பதுடன், மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்