பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 9:58 am

எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அளவில் அடையாளம் தெரியாத ஒருவரால் நேற்றிரவு 11.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

வீட்டின் 4 இடங்களில் துப்பாக்கித் தோட்டா துளைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்