நள்ளிரவு முதல் பால்மாவின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பால்மாவின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பால்மாவின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 8:02 pm

பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் ஊடக செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 152 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் காணப்படும் விலை நிலைமையினை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டு குழு இன்று கூடிய சந்தர்ப்பத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்