நீராடச் சென்றவர் நீரில் மூழ்கினார்; அக்கரைப்பற்றில் சம்பவம்

நீராடச் சென்றவர் நீரில் மூழ்கினார்; அக்கரைப்பற்றில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 7:49 pm

அக்கரைப்பற்று, ஒலுவில் கடற்பரப்பில் நீராடச்சென்ற மூவரில் ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து காணாமற்போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒலுவில் கடற்பகுதிக்கு குளிக்கச்சென்றபோது இன்று மாலை அனர்த்தத்திற்குள்ளான இருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்