நாய் குரைத்ததால் சிறைத் தண்டனை

நாய் குரைத்ததால் சிறைத் தண்டனை

நாய் குரைத்ததால் சிறைத் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 1:08 pm

கடந்த 10 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் நபர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு
மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலைக் குற்றவாளியைத் தேடும் போது, குறித்த நபரைப் பார்த்து பொலிஸ் மோப்ப நாய் குரைத்ததால், அவர்தான் குற்றவாளி என்று கைது செய்து கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மேலும், நாய் குரைத்தது ஒன்றைத் தவிர, கைதிக்கு எதிராக ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லாத நிலையில், அவரை சிறையில் அடைத்திருப்பது தவறு என்றும், அவர் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை என்றால், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்