நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும் – ஜனாதிபதி

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும் – ஜனாதிபதி

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 9:12 am

30 வருடகால யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டை கட்டியெழுப்பப்பட்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில், அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதை விட, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு பதிலளிக்க நேரிட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நாட்டிற்காகவும், இனத்திற்காகவும் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு, சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்குகின்ற அதேவேளை, நாட்டை மேலும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அகலவத்தை பகுதி விஹாரையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

நாடும், நாட்டு மக்களும் சவால்களை எதிர்நோக்கிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் மகா சங்கத்தினர் அதன் பொருட்டு முன்நின்றதாக இதன்போது ஜனாதிபதி மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்