தென் சூடானுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

தென் சூடானுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

தென் சூடானுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 2:01 pm

தென் சூடானுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

தென் சூடானில் நிலவியிருந்த மோதல் சூழ்நிலையை அடுத்து அந்த நாட்டிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் இடைநிறுத்தியிருந்தது.

ஆயினும், தென் சூடானில் தற்போது அமைதியான சூழ்நிலை காணப்படுவதால், இலங்கைப் பணியாளர்கள் அந்த நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதற்கான அனுமதி இன்றிலிருந்து வழங்கப்படுவதாகவும் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதித் பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய குறிப்பிடுகின்றார்.

தென் சூடானில் ஏற்கனவே 47 இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்