டெல்லி முதல்வர் மீது வழக்குத் தொடரவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு

டெல்லி முதல்வர் மீது வழக்குத் தொடரவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு

டெல்லி முதல்வர் மீது வழக்குத் தொடரவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 5:45 pm

டெல்லி முதல்வர் மீது வழக்கு தொடரவுள்ளதாக  மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இந்திய அரசியலில் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார்.

பட்டியிலில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான ஜி.கே.வாசன் பெயரும் இடம் பெற்றிருந்தது.

கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டுக்கு வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொது வாழ்வில் தூய்மை என்ற இலட்சியத்தோடு தான் வாழ்ந்து வருவதாகவும், நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ தான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை எனவும் வாசன் கூறியுள்ளார்.

தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை கெஜ்ரிவால் திரும்ப பெறவேண்டும் என்பதுடன் ,  மன்னிப்பும் கோர வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கெஜ்ரிவால் தனது அறிக்கையை திரும்ப பெறாத பட்சத்தில், சட்டப்படி அவர் மீது வழக்கு தொடரப்படும் என வாசன் எச்சரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்