காலாவதியான பொருட்களை கண்டறிய சுற்றிவளைப்பு

காலாவதியான பொருட்களை கண்டறிய சுற்றிவளைப்பு

காலாவதியான பொருட்களை கண்டறிய சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 5:23 pm

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உணவு உற்பத்தி மற்றும் விநியோக நிலையங்களில் தற்போது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று காலை 09 மணிமுதல் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பழனிதம்பி தேவராசா தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கு பல உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களிலுள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, காலாவதியான உணவுப்பொருட்கள் தொடர்பிலும் சுற்றிவளைப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ப.தேவராசா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்