இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி நீக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி நீக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 12:02 pm

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அண்டி பிளவர் அப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடரில் தோல்வி அடைந்தமையாலேயே  அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரில் 5-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்தது.  2வது இருபதுக்கு-20  போட்டியிலும் அந்த அணி தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. அண்டி பிளவர் கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அவரது வருகைக்குப் பின் இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20  போட்டிகளில் முதலாம் இடத்தைப் பிடித்தது. மேலும் தொடர்ந்து 3 ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. 2010ஆம் ஆண்டு இருபதுக்கு- 20  உலக கிண்ணத்தையும் இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடதக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்