அரியவகை உயிரினங்கள், உயிரிழந்த நிலையில் ஜோஹன்னஸ்பர்கில் கண்டுபிடிப்பு

அரியவகை உயிரினங்கள், உயிரிழந்த நிலையில் ஜோஹன்னஸ்பர்கில் கண்டுபிடிப்பு

அரியவகை உயிரினங்கள், உயிரிழந்த நிலையில் ஜோஹன்னஸ்பர்கில் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2014 | 10:19 am

மடகஸ்காருக்கு உரிய  நூற்றுக் கணக்கான, அரியவகை உயிரினங்கள் ,உயிரிழந்த நிலையில் தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பச்சோந்திகள், ஓணான்கள், பல்லிகள், தவளைகள், தேரைகள் என சுமார் 1600 உயிரினங்கள் 2 பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள வளர்ப்பு பிராணி விற்பனை நிலையங்களுக்கு இந்த உயிரினங்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

வட- அமெரிக்காவில் நிலவும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக 5 நாட்களுக்கும் அதிகமாக ஏற்பட்ட தாமதங்களால் இந்த உயிரினங்களுக்கு உரிய உணவு வகைகள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரினங்களை இறக்குமதி செய்த நிறுவனம் முறையான அனுமதிப் பத்திரங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , வன-உயிர் பாதுகாப்புக்கான செயற்பாட்டாளர்கள் மிருகவதை முறைப்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

300க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உயிரிழந்துள்ள நிலையில்  எஞ்சியுள்ள உயிரினங்களைப் பாதுகாக்க அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்