ஷங்கரின் ‘ஐ’ படத்தைத் தவறவிட்ட ஜீவா!

ஷங்கரின் ‘ஐ’ படத்தைத் தவறவிட்ட ஜீவா!

ஷங்கரின் ‘ஐ’ படத்தைத் தவறவிட்ட ஜீவா!

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 10:48 am

ஷங்கரின் ‘   படத்தில் தனக்கு கிடைத்த வாய்பை தான் தவறவிட்டுள்ளதாக ஜீவா  குறிப்பிட்டுள்ளார்.

அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் தனக்கு கிடைத்ததாகவும் அதனை தான் தவற விட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆள் தேவைப்பட்ட போது இயக்குனர் ஷங்கர் சார் வில்லன் கதாபாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும் என்று தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் தன்னால் அதில் நடிக்க முடியவில்லை. என்றும் அந்த வில்லன் வாய்ப்பு பாலிவுட் நடிகர் உபேன் படேல்க்கு சென்றது எனவும் ஜீவா கூறியுள்ளார்.

இதேவேளை என்றென்றும் புன்னகைதிரைப்படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் உள்ள ஜீவா யான்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கடல்திரைப்பட நாயகி துளசி நடித்துவருகின்றார்.

இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்