விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்

விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்

விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 11:20 am

இந்தியாவில் விடுதலை செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த 6 மீனவர்களையும் கடற்படையினரிடமிருந்து நேற்று தாம் பொறுப்பேற்றதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த மீனவர்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கை மீனவர்களின் ஒரு படகும் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், இந்திய கரையோர காவல் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதி தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாத நிலையில் நிறைவு பெற்றது.

எவ்வாறாயினும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளதுடன், இதன்போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்