மகேந்திர சிங் தோனியின் புதிய சாதனை

மகேந்திர சிங் தோனியின் புதிய சாதனை

மகேந்திர சிங் தோனியின் புதிய சாதனை

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 7:12 pm

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் எண்ணாயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி இன்றைய தினம் பெற்றார்.

நியூஸிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 28 ஓட்டங்களை கடந்த போது, அவர் இந்த மைல் கல்லை எட்டினார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் எண்ணாயிரம் ஓட்டங்களை கடந்த 6 ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்தார்.

இதுவரை 243 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள  மஹேந்திர சிங் தோனி, 9 சதங்கள், 54 அரைச்சதங்கள் அடங்கலாக 8046 ஓட்டங்களை குவித்துள்ளார்.

போட்டியொன்றின் அதிகபட்சமாக 183 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள அவர் 53.28 எனும் சரசரியை கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்