புல்மோட்டை மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

புல்மோட்டை மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

புல்மோட்டை மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 10:59 am

திருகோணமலை புல்மோட்டை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

கொக்கிளாய் களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற தமக்கு கட்டுவலையைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட கடற்றொழில் திணைக்களம் தடை விதித்துள்ளதாக தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் ​தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கூறி கடற்றொழில் திணைக்களத்தினால் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புல்மோட்டை மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், கொக்கிளாய் களப்பை, சூழவுள்ள ஏனைய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் தொழிலில் ஈடுபடுவதற்கு அதிகாரிகள் அனுமதியளித்துள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக கடற்றொழில் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

புல்மோட்டை மீனவர்களின் குற்றச்சாட்டை நிராகரிப்பதுடன், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் தொழிலில் ஈடுபடுகின்றவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்