நாடாளாவிய ரீதியில் உணவகங்களை சோதனையிட நடவடிக்கை

நாடாளாவிய ரீதியில் உணவகங்களை சோதனையிட நடவடிக்கை

நாடாளாவிய ரீதியில் உணவகங்களை சோதனையிட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 9:35 am

நாடாளாவிய ரீதியில் உணவகங்களை சோதனையிடும் நடவடிக்கை இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன் அடிப்படையில் நாடளாவய ரீதியில் உள்ள உணவகங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள். பேக்கரிகள் என்பன சோதனையிடப்படவுள்ளதாக  சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹீபால சுட்டிக்காட்டினார்.

நுகர்வோருக்கு சுகாதாரமான உணவைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சுக்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்.

ஹோட்டல்கள், உணவகங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் இதன் போது சோதனைக்குட்படுத்தப்பட்டு, நுகர்வோர் பயன்பாட்டிற்கு உதவாத உணவுகளை உற்பத்தி செய்யவர்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டொக்டர் பாலித்த மஹீபால குறிப்பிட்டார்.

சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 1700 க்கும் அதிகமானவர்கள் இன்றும் நாளையும் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்