தேவிந்தர்பால் சிங் புல்லர்  மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

தேவிந்தர்பால் சிங் புல்லர் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

தேவிந்தர்பால் சிங் புல்லர் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 4:38 pm

1993 ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடெல்லியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின் குற்றவாளியான தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு  மரண தண்டனையை நிறைவேற்ற இந்திய உச்ச நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்ற புல்லரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

புல்லரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரிய மனு தொடர்பில்  விளக்கம் அளிக்குமாறு மத்திய மற்றும் டெல்லி மாநில அரசாங்கங்களுக்கு  உச்ச நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

புல்லர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியாலை, ஒரு வார காலத்திற்குள் அவரின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

1993 ஆம் ஆண்டு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு புல்லர் அனுப்பிய கருணை மனு 8 ஆண்டுகள் கடந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என புல்லரின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பகிரங்க விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு  நீதியரசர் பீ சதாசிவம் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் இணக்கம் தெரிவித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்