சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 9:22 am

தங்காலை ஹுங்கம பகுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுள் சிறுமியின் தாயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சிறுமி ஒரு வருடத்திற்கு முன்னதாக அவரின் சிறிய தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தங்காலை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்