கொழும்பு ஃபிளவர் வீதியில் இன்று முதல் புதிய போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஃபிளவர் வீதியில் இன்று முதல் புதிய போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஃபிளவர் வீதியில் இன்று முதல் புதிய போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 10:17 am

கொழும்பு ஃபிளவர் வீதியின் புதிய போக்குவரத்துத் திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஃஃபிளவர் வீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போக்குவரத்துத் திட்டத்தின் ஒத்திகை நடவடிக்கை வெற்றியளித்ததை அடுத்து, இன்று முதல் அந்த திட்டம்  நிரந்தரமாக  நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

நூலக சுற்று வட்டத்தின் ஊடாக வரும் வாகனங்கள், ஃபிலவர் வீதியூடாக பித்தளைச் சந்தி , தர்மபால மாவத்தை வழியே பிரவேசித்து, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக கொழும்பை நோக்கி செல்ல முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொள்ளுபிட்டி லிபர்ட்டி சுற்று வட்டத்தில் நிலவும் பாரிய வாகன நெரிசலுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்