காலிமுகத்திடலில் துஷ்பிரயோக சம்பவம்; குற்றவாளிக்கு அபராதம்

காலிமுகத்திடலில் துஷ்பிரயோக சம்பவம்; குற்றவாளிக்கு அபராதம்

காலிமுகத்திடலில் துஷ்பிரயோக சம்பவம்; குற்றவாளிக்கு அபராதம்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 7:35 pm

காலி முகத்திடலில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட கடற்படை வீரருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 500 ரூபா அபராத தொகைக்கு மேலதிகமாக பத்தாயிரம் ரூபாவை விஹாரையொன்றிற்கு வழங்குமாறும் கோட்டை பிரதம நீதவான் திலிண கமகே உத்தரவிட்டார்.

தனது கணவருடன் காலி முகத்திடலுக்கு சென்றிருந்த பெண்ணொருவரை மதுபோதையில் இருந்த குற்றவாளியான கடற்படை வீரர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கோட்டை பொலிஸாருக்கு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்