ஆவா குழு உறுப்பினர்களுக்கு பிணை: தலைவருக்கு விளக்கமறியல்

ஆவா குழு உறுப்பினர்களுக்கு பிணை: தலைவருக்கு விளக்கமறியல்

ஆவா குழு உறுப்பினர்களுக்கு பிணை: தலைவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 2:26 pm

யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த எட்டு பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

எனினும் ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படுபவர் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த மூவருக்குமான விளக்க மறியல் பெப்ரவரி 13ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மூன்று வழக்குகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை ஒன்பது பேருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சந்தேக நபர்களை தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சாட்சியாளர்கள் மற்றும் முறைப்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை தவிர்க்குமாறும் நீதவான் சந்தேக நபர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனை தவிர மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிமன்றம் சந்தேக நபர்களுக்கு  அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்