ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 12:05 pm

நியூஸிலாந்துக்கு எதிராக இறுதி ​போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 4-0 என தொடரைக் கைப்பற்றுவோம் என நியூஸிலாந்து வீரர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், ஹொமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டியில்15 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டியில்  வெற்றி தோல்வியின்றி முடிவு பெற்றது . 4-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தாரை வார்த்து தொடரையும் இழந்தது. அத்தோடு தரவரிசையில் முதலிடத்தையும் பறிகொடுத்தது. எனவே, குறைந்த பட்சம் 2 மாதங்களுக்குப் பின் முதல் வெற்றியையாவது பதிவு செய்ய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பின்னர் இந்திய அணி சரிவர செயற்படவில்லை. டிசம்பர் மாதத்துக்குப் பின் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு போட்டியில் வெற்றி தோல்வியின்றி முடிவு, ஒரு போட்டியில் முடிவில்லை. உலக சாம்பியன் போட்டிகளின் பின்னர் இந்திய அணியால் ஒரு வெற்றியை கூட எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணி தலைவர் தோனியும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். ஆனால் எதுவும் பலனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்