அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 3:38 pm

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.

அவருடன் மேலும் இரண்டு பிரதிநிதிகளும் இன்று அதிகாலை வருகைதந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

உதவி இராஜாங்க செயலாளராக பதிவுயேற்றதன் பின்னர் நிஷா பிஸ்வால்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விஜயத்தின்போது அவர் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிஷா பிஸ்வால் யாழ். குடாநாட்டிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்