அசினை கைவிட்ட பொலிவுட்

அசினை கைவிட்ட பொலிவுட்

அசினை கைவிட்ட பொலிவுட்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2014 | 12:32 pm

ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அசின் கஜினி ரீ-மேக்கில் ஆமீர்கானுக்கு ஜோடியாக நடித்தததை தொடர்ந்து  அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இதையடுத்து அசினுக்கு வாய்ப்புகள் அதிகரித்தன. அவரை தொடர்ந்து த்ரிஷா, காஜல் அகர்வால், இலியானா என பல்வேறு தென்னிந்திய கதாநாயகிகளும் பொலிவுட்டுக்கு படையெடுத்தனர்.

எனினும் வேகமாக வளர்ந்து வந்த அசினுக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2012ம் ஆண்டில் அவர் நடித்த 3 இந்தி படங்கள் திரைக்கு வந்திருந்த போதும்
கடந்த வருடம் அவரின் ஒரு திரைப்படம் கூட வெளிவரவில்லை.

இதேவேளை இந்த ஆண்டில் “ஆல் இஸ் வெல்” என்ற ஒரு திரைப்படத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.

கடந்த காலங்களில் தென்னிந்திய நடிகைகள் மீது கவனம் செலுத்திவந்த பொலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும் கேத்ரினா கைப், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, அலியா பட், பரினீதி சோப்ரா ஆகிய நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த நிலை ஏற்பட்டுளளது.

எனினும் விளம்பரங்கள் பலவற்றில் அசின் ஒப்பந்தமாகி இருப்பதுடன் சமீபத்தில் அழகு சாதன பொருட்கள் நிறுவனம் ஒன்றின் தூதராக அவர் அமர்த்தப்பட்டு இருக்கிறமையும் குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்