ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மரண தண்டனைக்கு உரியவர்களே; உச்ச நீதிமன்றம் கருத்து

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மரண தண்டனைக்கு உரியவர்களே; உச்ச நீதிமன்றம் கருத்து

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மரண தண்டனைக்கு உரியவர்களே; உச்ச நீதிமன்றம் கருத்து

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 9:57 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றவாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்கள் என இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான  விசாரணை உச்ச நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கருணை மனு மீதான முடிவை குடியரசுத்தலைவர் 11 வருடங்களுக்கு மேல் தாமதம் செய்ததால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தபோது, மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும், அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்