யாழ். புளியங்குடலில் போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்

யாழ். புளியங்குடலில் போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்

யாழ். புளியங்குடலில் போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 8:22 pm

இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் மீது யாழ். புளியங்குடல் பகுதியில் வைத்து தனியார் பஸ் சாரதி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்யுமாறும், அவரது அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்யுமாறும் கோரி இ.போக்குவரத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் சிரமத்ததை எதிர்நோக்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண முகாமையாளர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு தற்போது போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்