மூன்று கிரிக்கெட் சபைகளின் முன்மொழிவுகள் முன்னேற்றத்திற்கு உதவும் – அலன் இஸாக்

மூன்று கிரிக்கெட் சபைகளின் முன்மொழிவுகள் முன்னேற்றத்திற்கு உதவும் – அலன் இஸாக்

மூன்று கிரிக்கெட் சபைகளின் முன்மொழிவுகள் முன்னேற்றத்திற்கு உதவும் – அலன் இஸாக்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 5:03 pm

நிதி ரீதியில் பலமான மூன்று கிரிக்கெட் சபைகள் சமர்ப்பித்துள்ள புதிய முன்மொழிவுகள் மேலதிக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் அலன் இஸாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டிற்கு பின்னரான வர்த்தக உரிமைகளை விற்பனை செய்வது தொடர்பில் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு உறுப்பு நாடுகளின் பங்களிப்பு உடன்படிக்கை தேவைப்படுவதாக அலன் இஸாக் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் சந்திப்பின் நிறைவில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அனைத்து உறுப்பு நாடுகளும் திருப்தி அடையும் வகையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட வேண்டும் என தாம் கடந்த ஆண்டு இந்திய, அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளை கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்