முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றி

முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றி

முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 2:03 pm

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஒட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது 2 ஆம் இன்னிங்ஸ்சை இன்று தொடர்ந்த பங்களாதேஷ் அணி 250 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

பங்களாதேஷ் அணிசார்பாக இரண்டாம் இன்னிங்ஸ்சில் அதிக பட்சமாக மொனிமுல் ஹக் 50 ஓட்டங்களையும், நஷீர் ஹுசைய்ன் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சிறப்பாக பந்துவீசிய டில்றூவான் பெரரா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 730 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

கௌசால் சில்வா மற்றும் கித்றுவான் விதானகே ஆகியோர் இந்தப் போட்டியில் கன்னிச் சதங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷஹீப் அல் ஹசான் மூன்று விக்கெட்டுக்களையும், சொஹக் ஹசி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 232 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்ததது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்