மன்னார் மனித புதைகுழி எலும்புகூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணி ஆரம்பம்

மன்னார் மனித புதைகுழி எலும்புகூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணி ஆரம்பம்

மன்னார் மனித புதைகுழி எலும்புகூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணி ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 8:20 pm

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பெட்டிகளில் அடைக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய மனிதப் புதைகுழியை தோண்டும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.

18 ஆவது நாளான இன்று 5 மனித எலும்புக்கூடுகள் பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைகள் நாளையும் இடம்பெறவுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மன்னார் ஏ-32 வீதியின் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு அருகிலுள்ள வீதியூடாக நீர்குழாய்களை பொருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களால் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்