பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்கத் தகடுகள் திருட்டுப் போயுள்ளன

பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்கத் தகடுகள் திருட்டுப் போயுள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 7:38 pm

களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின்  நாகதம்பிரான் சந்நிதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுதியான  இயந்திரத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன.

இன்று மதியம் ஆலயம் பூஜைக்காக திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாகதம்பிரான் சந்நிதி உடைக்கப்பட்டு தங்கத் தகடுகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பல ஆலயங்களில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்