உகண்டா பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

உகண்டா பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 7:58 pm

உகண்டா பாதுகாப்பு அமைச்சர் உட்பட அந்த நாட்டின் முக்கிய இராணுவ அதிகாரிகள் சிலர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.

உகண்டா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஒடாங்கோ ஜீஜீ  தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழு பலாலி விமான தளத்தை இன்று காலை வந்தடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த குழுவினர் கொழும்பிலிருந்து விமானம் மூலம் இன்று காலை பலாலி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

உகண்டா பாதுகாப்பு அமைச்சருக்கும், அந்த நாட்டின் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் பலாலியில் வரவேற்பளிக்கப்பட்டது.

இதன் பின்னர் இவர்கள், நல்லூர் ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், யாழ் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டுள்ளனர்.

இறுதியாக உகண்டா பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான இராணுவ உயர் அதிகாரிகள் குழு யாழ். பொது நூலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்