”ஃபெயார் ட்ரோலின்” மீன்பிடி முறைமையை கைவிட தமிழக மீனவர்கள் இணக்கம்

”ஃபெயார் ட்ரோலின்” மீன்பிடி முறைமையை கைவிட தமிழக மீனவர்கள் இணக்கம்

”ஃபெயார் ட்ரோலின்” மீன்பிடி முறைமையை கைவிட தமிழக மீனவர்கள் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2014 | 8:25 pm

இலங்கையின் சமுத்திர சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீன்பிடி முறைமையான ஃபெயார் ட்ரோலின் முறைமையிலிருந்து விலகுவதற்கு தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்த முறைமையை கைவிடுவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தை  சிநேகபூர்வமாக நடைபெற்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு எதிர்காலத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கு இந்த பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை எந்தவொரு இந்திய மீனவரும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

குறித்த காலப் பகுதிக்குள் மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சென்னை பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் இணக்கம் கண்டதாக நிமல் ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்