சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உச்ச அதிகாரங்கள் மூன்று நாடுகள் வசம்?

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உச்ச அதிகாரங்கள் மூன்று நாடுகள் வசம்?

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உச்ச அதிகாரங்கள் மூன்று நாடுகள் வசம்?

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2014 | 10:46 am

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் முதல் நாள் அமர்வு  துபாயில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஐ.சி.சியின் எதிர்கால நிர்வாக வியூகம் தொடர்பிலான நிதி சம்பந்தப்பட்ட கொள்கைகள் சில ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. ஆற்றல்களை கருத்திற்கொண்டு சகல உறுப்பினர்களுக்கும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் அளிக்கப்படும். இதில் எந்தவொரு நாட்டினதும் அங்கத்துவ நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டது.

2. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக சபைகளை தவிர எஞ்சிய பூரண உறுப்பினர்களுக்கு வருடாந்தம் பொதுவான கொடுப்பனவு கிடைக்கும் டெஸ்ட் கிரிக்கெட் நிதியம் ஒன்றை ஸ்தாபித்தல்.

3. இதன்போது ஐ.சி.சியின் முன்னிலை உறுப்பினர்கள் சம்பந்தமாக வலுவான தலைமையின் தேவையை ஏற்றுக்கொள்ளல். இந்திய கிரிக்கெட் சபை இதில் நடுநிலையான தலைமையத்துவ பொறுப்பை ஏற்க வேண்டும்.

4. அங்கத்துவ நிதி செலுத்துவதன் மூலம் பூரண அங்கத்தவர்கள் ஐ.சி.சியின் பிரிவுகளுக்காக வழங்கும் ஒத்துழைப்பின் பிரமாணத்தை அறிந்துகொள்ளல்.

5. நடைமுறை ரீதியிலான தலைமையை வழங்குவதற்காக நிறைவேற்றுக் குழுவொன்றும் நிதி மற்றும் வர்த்தக செயற்பாட்டுக் குழுவும் ஸ்தாபிக்கப்படும். இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 5 அங்கத்தவர்களைக் கொண்டதாக இந்தக் குழு அமையும்.

6. ஐ.சி.சியின் புதிய நிர்வாக வியூகம் மற்றும் ஊடக உரிமைகளுக்கான சுற்றுநிரூபத்தை நோக்கிச் செல்லும் இந்தப் பருவகாலத்துக்கான தலைமைத்துவம் இந்த வருட ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கவுள்ளது.

7.இந்திய கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் ஐ.சி.சியின் தலைமைத்துவத்தை வகிக்கும் அதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் நிறைவேற்றுக் குழுவின் தலைமைப் பதவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கை குழுவின் தலைமை பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆகிய முக்கிய 7 விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல கொள்கைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்