ஐ.பி.எல் 2014; 233 பேரைக் கொண்ட ஏலப் பட்டியலில் இலங்கையின் 39 வீரர்கள்

ஐ.பி.எல் 2014; 233 பேரைக் கொண்ட ஏலப் பட்டியலில் இலங்கையின் 39 வீரர்கள்

ஐ.பி.எல் 2014; 233 பேரைக் கொண்ட ஏலப் பட்டியலில் இலங்கையின் 39 வீரர்கள்

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2014 | 2:02 pm

ஐ.பி.எல் போட்டிகளின், 2014 ஆம் ஆண்டுக்கான தொடரில் முன்னணி வீரர்களான இலங்கையின் குமார் சங்கக்கார, அவுஸ்திரேலியாவின் மைக்கல் கிளார்க், போன்றோர் பங்குபற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த எந்தவொரு வீரரும் பட்டியலில் உள்வாங்கப்படவில்லை.

இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் அடங்களாக 233 வீரர்கள் கொண்ட ஏலத்திற்கான பட்டியலில் குமார் சங்கக்காரவின் பெயர் இடம்பெறவில்லை, எனினும் மஹேல ஜயவர்தன, அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த தலா 46 வீரர்களும், இலங்கையைச் சேர்ந்த 39 வீரர்களும், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த 29 வீரர்களும், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 28 வீரர்களும், நியூசிலாந்தைச் சேர்ந்த 18 வீரர்களும், இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வீரர்களும், சிம்பாவ்பேயைச் சேர்ந்த 8 வீரர்களும், பங்களாதேஷைச் சேர்ந்த 7 வீரர்களும், நெதர்லாந்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஆரம்ப விலையாக இரண்டு கோடி ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்கள்

இலங்கை – மஹேல ஜயவர்தன, அஞ்சலோ மெத்திவ்ஸ், திலகரட்ன டில்ஷான்

இந்தியா – பிரவீன் குமார், அமித் மிஷ்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, பிரக்ஞான் ஓஜா, யூசுப் பதான், விரேந்தர் செவாக், யுவ்ராஜ் சிங், சௌரவ் திவாரி, றொபின் உத்தப்பா, முரளி விஜய்

அவுஸ்திரேலியா – ஜோர்ஜ் பெய்லி, பிரட் ஹடின், பிரட் ஹோட்ஜ், மைக்கல் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, ஷோன் மார்ஷ், ஜேம்ஸ் பற்றின்சன், ஸ்டீவன் ஸ்மித், மிச்சல் ஸ்ரார்க்

இங்கிலாந்து – அலெக்ஸ் ஹேல்ஸ், சமித் பட்டேல், கெவின் பீற்றர்சன்

நியுஸிலாந்து – பிரென்டன் மெக்கலம், றொஸ் டெய்லர்.

தென்னாபிரிக்கா – ஜக்ஸ் கலிஸ்

மேற்கிந்தியதீவுகள் – மார்லன் சாமுவெல்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்