விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 9:13 am

விவசாயிகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

இதற்கான தேசிய நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 1,250 விவசாயிகளுக்கு விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக விவசாய காப்புறுதி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் இதுவரையில் 9,57,000  விவசாயிகள், ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்திற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்ட 1,28,000 ஆயிரம் விவசாயிகள் ஓய்வூதிய கொடுப்பனவுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

60 தொடக்கம் 63 வயதிற்குட்பட்டவர்களுக்கு 1000 ரூபாவும், 64 தொடக்கம் 70 வயதிற்குட்பட்டவர்களுக்கு 1,250 ரூபாவும், 70 தொடக்கம் 78 வயதிற்குட்பட்டவர்களுக்கு 2000 ரூபாவும் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

78 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 5000 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்