விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்

விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 1:31 pm

இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட 20 இலங்கை மீனவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அந்த மீனவர்கள் 10 படகுகளுடன் கற்பிட்டியை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இந்த மீனவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் சிலர் கற்பிட்டியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்