வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் பயிற்சி

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் பயிற்சி

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 2:00 pm

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்பு கற்கை தொடர்பான பயிற்சிப்பட்டறை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுவருகின்றது.

அரசியலமைப்பு கற்கைகள் நிறுவனத்தினால் இந்த பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது யாழ். பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் ஆரம்பமான இந்த பயிற்சிப்பட்டறை இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இந்த பயிற்சிப்பட்டறையில், வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்