மறைந்த பாப்பரசரின் குருதி வைக்கப்பட்டிருக்கும் புனிதக் குப்பியைக் காணவில்லை

மறைந்த பாப்பரசரின் குருதி வைக்கப்பட்டிருக்கும் புனிதக் குப்பியைக் காணவில்லை

மறைந்த பாப்பரசரின் குருதி வைக்கப்பட்டிருக்கும் புனிதக் குப்பியைக் காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 9:38 am

மறைந்த பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலின் (இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்) குருதி வைக்கப்பட்டிருக்கும் புனிதக் குப்பி காணாமல்போயுள்ளது.

இதனையடுத்து, இத்தாலியப் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாப்பரசரின் குருதியில் நனைக்கப்பட்ட ‘புனித துணித் துண்டொன்று’ மத்திய இத்தாலிப் பிராந்தியமான அப்ரூஸோவில் சிறிய தேவாலயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமையன்று தேவாலயத்தை உடைத்து அந்த புனிதப் பொருள் களவாடப்பட்டுள்ளது.

விலை மதிக்கமுடியாத இந்தத் திருப்பொருள் போன்று உலகிலேயே இன்னும் இரண்டு தான் உள்ளதாகக் கருதப்படுகிறது.

போலந்து நாட்டவரான முன்னாள் பாப்பரசருக்கு இந்த மத்திய இத்தாலி மலைப்பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது.

வத்திக்கான் வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து விடுபட நினைக்கும்போதேல்லாம் பாப்பரசர் இங்கு சென்றுதான் மன அமைதி பெறுவார் என்று கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்