மண் பானையில் பழமைவாய்ந்த செப்பு நாணயங்கள்; வவுனியாவில் கண்டுபிடிப்பு

மண் பானையில் பழமைவாய்ந்த செப்பு நாணயங்கள்; வவுனியாவில் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 5:32 pm

வவுனியா – மருக்காரம்பளை பகுதியில் சுமார் 100 செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீதி திருத்தப் பணிகளின்போதே இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாண்டிக்குளத்திலிருந்து கல்மடு வரையான வீதி புனரமைப்பு பணிகளின்போது வெட்டப்பட்ட வடிகான் ஒன்றிலிருந்து இன்று காலை இந்த செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

 

1 2

வடிகானிலிருந்த மண் பானை ஒன்றில் இருந்து இந்த நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நாணங்கள் எந்தக் காலத்தைச் சார்ந்தவை என்பது தொடர்பில் ஆராயும் பொருட்டு அவற்றை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் கூறினார்.

இருப்பினும், கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பு நாணயங்கள் தற்போது மாவட்ட அரசாங்க அதிபரின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த நாணயங்கள் 11 – 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அடையாளங்காணப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்தார்.

3

 

5

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்