புதுப்பொலிவுடன் திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி புகையிரத நிலையத்தின் தற்போதைய நிலை என்ன?

புதுப்பொலிவுடன் திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி புகையிரத நிலையத்தின் தற்போதைய நிலை என்ன?

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 5:54 pm

இந்தியாவின் கடனுதவியின் கீழ் சுமார் 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு
கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி புகையிரத நிலையம் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், அண்மையில் கட்டப்பட்ட இந்த புகையிரத நிலையத்தின் மலசல கூடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீதிகளில் தேங்கி நிற்பதால் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக  பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகள் மாத்திரமன்றி வெளிநாட்டு பயணிகளும் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவது பாராட்டத்தக்கது. ஆயினும், அதிக செலவில் நிர்மாணிக்கப்படும் இவ்வாறான புகையிரத நிலையங்களை பராமரிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பல்லவா?

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியும் இது வரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒப்பந்தக்காரர்களின் தரக்குறைவான நிர்மாணம் மாத்திரமன்றி, அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் இதன் மூலம் புலனாகின்றது.

இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் அதிகாரிகள் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்