பனிச்சையடி கடலில் மூழ்கிய மூவரில் இருவர் சடலமாக மீட்பு

பனிச்சையடி கடலில் மூழ்கிய மூவரில் இருவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 2:10 pm

மட்டக்களப்பு – பனிச்சையடி கடலில் நீராடச்சென்று காணாமற்போனவர்களில்  இளைஞர் இருவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

மற்றவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு – பனிச்சையடி கடலில் நீராடச்சென்று நேற்றுமுன்தினம் மாலை மூன்று இளைஞர்கள் காணாமற்போயிருந்தனர்.

நண்பர்கள் ஏழு பேருடன் ஒன்றாக நீராடிக்கொண்டிருந்த போதே இவர்கள் மூவரும் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சின்ன ஊறணியைச் சேர்ந்த டானியல், பனிச்சையடியைச் சேர்ந்த ஜெரோம் அனிஸ்டஸ், மட்டக்களப்பு புதிய எல்லை வீதியை சேர்ந்த பிரதீப் ஆகியோரே அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தனர்.

19, 20  மற்றும் 23  வயதான இளைஞர்களே அனர்த்தத்திற்குள்ளானதுடன், அவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்