தபால் மூலம் வாக்களிப்போர் தகவல்களைப் பெற 1919ற்கு அழைக்கலாம் – தேர்தல்கள் செயலகம்

தபால் மூலம் வாக்களிப்போர் தகவல்களைப் பெற 1919ற்கு அழைக்கலாம் – தேர்தல்கள் செயலகம்

தபால் மூலம் வாக்களிப்போர் தகவல்களைப் பெற 1919ற்கு அழைக்கலாம் – தேர்தல்கள் செயலகம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 9:24 am

தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரச ஊழியர்கள் தமது பதிவு தொடர்பிலான தகவல்களை, அரச தகவல் கேந்திர நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும், தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் பதிவு தொடர்பான தகவல்களை, 1919 என்ற அரச தகவல் கேந்திர நிலையத்தின் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

நெருக்கடி நேரத்தில் இந்தத் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள சிரமம் ஏற்படுவதால், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்