சுவாசக் குழாயில் வாழைப்பழத் துண்டு சிக்கியதில் குழந்தை உயிரிழப்பு

சுவாசக் குழாயில் வாழைப்பழத் துண்டு சிக்கியதில் குழந்தை உயிரிழப்பு

சுவாசக் குழாயில் வாழைப்பழத் துண்டு சிக்கியதில் குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 9:18 am

சுவாசக் குழாயில் வாழைப்பழத் துண்டு சிக்கியதில் தெடிகமுவ பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

08 மாதங்களே நிரம்பிய குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது, உயிரிழந்திருந்ததாக ஹோமாகம வைத்தியசாலையின், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் பிரதீப் ரத்னசேகர குறிப்பிட்டார்.

வாழைப்பழத்துண்டு குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்குண்டதை அடுத்து ஏற்பட்ட சுவாசக் கோளாறினால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்