சுமார் 400 இலட்சம் ரூபா பெறுமதியான நுகர்விற்கு உதவாத பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது

சுமார் 400 இலட்சம் ரூபா பெறுமதியான நுகர்விற்கு உதவாத பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது

சுமார் 400 இலட்சம் ரூபா பெறுமதியான நுகர்விற்கு உதவாத பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 3:57 pm

சுமார் 400 இலட்சம் ரூபா பெறுமதியான நுகர்விற்கு உதவாத 400 தொன் பருப்பு, வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் கைப்பற்றப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தியோகத்தர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது நுகர்விற்கு உதவாத பருப்புத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்