சிம்பு – நயன்தாரா திருமணம் விரைவில்?

சிம்பு – நயன்தாரா திருமணம் விரைவில்?

சிம்பு – நயன்தாரா திருமணம் விரைவில்?

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 1:16 pm

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டது. அதை போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டும் படத்துக்கு விளம்பரம் தேடினர்.

அது போல் இந்த படத்தில் காட்சி வைக்கிறார்கள். சிம்புவும், நயன்தாராவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது போல் இக்காட்சியை எடுக்கப் போகிறார்களாம். இந்து கோவில் ஒன்றில் இதை படமாக்க உள்ளனர். செட் போட்டு எடுக்கலாமா அல்லது நிஜ கோவிலிலேயே படமாக்கலாமா என்று பரிசீலனை நடைபெறுகிறது.

சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்கள். அடுத்து நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு திருமணம் வரை வந்தார்கள். கடைசியில் இதுவும் முறிந்து போனது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்