கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண சபையின் அமர்வுகள் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 2:06 pm

கிழக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான முதலாவது அமர்வு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபை உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துகொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்தில், சபையின் தவிசாளரால் சபை ஒத்திவைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாண சபை அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 11.30 மணிமுதல் 12 மணிவரை சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபானி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை  தொடர்பில் சபையின் தவிசாளர் ஆரியவதி கலபதியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, போதியளவு அங்கத்தவர்கள் சபைக்கு சமூகமளிக்காமையினால், தமக்குள்ள கோரம் அதிகாரத்தை பயன்படுத்தி சபை அமர்வினை ஒத்திவைத்ததாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்