காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 1:28 pm

லிந்துலை, சமர்செட் பழையதோட்டம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 10 வயதுச் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவனின் சடலம் இன்று காலை 8 மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

லிந்துலை, சின்ன மட்டுகலை பகுதியில் நேற்று மாலை காணாமற்போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சிறுவனே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும், நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் நிறைவுபெற்றதன் பின்னரே மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்