கரையொதுங்கிய ஆளில்லாப் படகில் திருட்டு

கரையொதுங்கிய ஆளில்லாப் படகில் திருட்டு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 9:18 pm

மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்கரையில் ஒதுங்கிய படகில் இருந்து பொருட்களை திருடியதாகக் கூறப்படும் சிலரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
குறித்த படகு, மீனவர்கள் இன்றி நேற்று மாலை கரையொதுங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடலில் படகொன்று மிதந்து வருவதைக் கண்ட பிரதேச மக்கள் படகை கரை சேர்த்துள்ளனர்.

கட்டுமரங்களாலும் மூங்கில்களாலும்  தயாரிக்கப்பட்ட இந்தப் படகில் கருவாடு உட்பட சமையலுக்கான பொருட்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த படகு மியன்மார் நாட்டைச் சேர்ந்தது என மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கரையில் பொதுமக்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகை,  இனந்தெரியாத சிலர் இன்று காலை உடைத்து அதன் பாகங்களை உழவு இயந்திரங்கள் மூலம் எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிலர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்தப் படகு குறித்து பொலிஸாரும் கடற்றொழில் திணைக்கள அதகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்